‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இணைந்தார் கமல்ஹாசன்: புதிய லுக்கில் வெளியான புகைப்படம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இணைந்தார் கமல்ஹாசன்: புதிய லுக்கில் வெளியான புகைப்படம்

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்றுமுதல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில்’ என்று தெரிவித்து, இயக்குநர் ஷங்கருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1996 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டோர் நடித்த ‘இந்தியன்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்திலும் இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தினர். 'விக்ரம்' மெகா ஹிட்டுக்கு பிறகு, ’இந்தியன்-2’ படத்தை லைகா நிறுவனத்துடன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்

இணைந்து தயாரிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in