சர்ச்சைக் கருத்து: கைதான பிரபல நடிகருக்கு 14 நாள் காவல்

சர்ச்சைக் கருத்து: கைதான பிரபல நடிகருக்கு 14 நாள் காவல்

சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்தி நடிகர் கமால் ஆர் கான் என்ற கமால் ரஷித் கான். இவர், தேஷ் துரோகி, ஏக் வில்லன் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சிதம் என்ற இந்திப் படத்தையும் முன்னா பாண்டே பெரோஸ்கார் என்ற போஜ்புரி படத்தையும் தயாரித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் பரபரப்பு கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம்.

இவர், மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் குறித்து 2020-ம் ஆண்டு, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெறுக்கத்தக்கக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது அப்போது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக மும்பை மலாட் காவல்துறையில், யுவசேனா அமைப்பின் ராகுல் கனல் என்பவர் அவர் மீது புகார் அளித்திருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் துபாயில் இருந்து விமானம் மூலம், கமால் ஆர் கான் இன்று அதிகாலை மும்பை வந்தபோது, அவரை கைது செய்த போலீஸார் போரிவிலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 14 நாள் நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in