‘ரோலக்ஸ்’ சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்: 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தைப் பரிசளித்த கமல்!

‘ரோலக்ஸ்’ சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்: 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தைப் பரிசளித்த கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

ஜூன் 3-ம் தேதி வெளியான இப்படம், 4 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடி வசூல் ஈட்டியிருக்கிறது. தனது தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் கமல் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் சொகுசு காரைப் பரிசளித்திருக்கும் கமல், படத்தின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு, அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக்கை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ரோலக்ஸ் எனும் பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை கமல் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். இதன் மதிப்பு ரூ.14,72,500 ஆகும். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சூர்யா , “இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! நன்றி கமல்ஹாசன் அண்ணா” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in