ஜூனியர் என்.டி.ஆர்-க்கு வில்லனாகும் கமல்?

ஜூனியர் என்.டி.ஆர்-க்கு வில்லனாகும் கமல்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 'ஆர்.ஆர்.ஆர்.' ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். தன்னுடைய 31-வது படத்தை இயக்குநர் பிரசாந்த் நீலுடன் அறிவித்துள்ளார். பிரசாந்த் நீல் 'கே.ஜி.எஃப்' வெற்றி படத்தை கொடுத்தவர். இந்த கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்த கதையில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஒரு வலுவான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்மறையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று இயக்குநர் பிரசாந்த் நீல் அவரை அணுகியதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஆனால் கமல் தரப்பில் இருந்து இன்னும் பதில் எதுவும் வரவில்லை எனவும் கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பது உறுதியானால் இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி தீவிரமான புரமோஷன் பணிகளில் படக்குழு இறங்கி உள்ளது.

இதற்காக படக்குழு கேரளா, மலேசியா என பல ஊர்களுக்கு பயணத்திட்டம் வைத்துள்ளது. 'விக்ரம்' படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகம், 'இந்தியன்2', இயக்குநர் இரஞ்சித்துடன் ஒரு படம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in