‘அடுத்து நாங்கள் இணையும் படம்' - சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பது பற்றி கமல் சூசகம்

‘அடுத்து நாங்கள் இணையும் படம்' - சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பது பற்றி கமல் சூசகம்

விக்ரம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பது பற்றிய சூசகத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் கமல், சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 3-ம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.

‘விக்ரம்’ திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த வீடியோவில், “கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிரவைத்த என் அருமைத் தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே இதைச் செய்தார். அடுத்து நாங்கள் இணையும் படத்தில் அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை முழுவதுமாகக் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக அடுத்த படத்தில் கமல் மற்றும் சூர்யா இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in