`விக்ரம்’ பட அடுத்த அப்டேட்டை வெளியிட்டது படக்குழு

`விக்ரம்’ பட அடுத்த அப்டேட்டை வெளியிட்டது படக்குழு

கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

’மாஸ்டர்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ’விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துவரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் டீஸரும், கிளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றன. படம் ஜூன் 3-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா முறையில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 15-ம் தேதி இந்தப் படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in