கமலின் ’விக்ரம்’ பட புதிய அப்டேட்!

கமலின் ’விக்ரம்’ பட புதிய அப்டேட்!

கமல்ஹாசன் நடிக்கும் `விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதியை வரும் 14 ஆம் படக்குழு அறிவிக்க இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ’விக்ரம்’. இதில், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், காயத்ரி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது. 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 14ம் தேதி காலை 7 மணிக்கு ’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருப்பதாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.