கமல்ஹாசன் திடீர் முத்த மழை! நெகிழ்ந்துபோன நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர்

கமல்ஹாசன் திடீர் முத்த மழை! நெகிழ்ந்துபோன நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர்

நடிகர் கமல்ஹாசன் திடீரென கொடுத்த முத்த மழையால் நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர் நெகிழ்ந்து போனார்கள்.

கமல்ஹாசன் நடித்து கடந்த 3-ம் தேதி வெளியான படம், ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படம் பான் இந்தியா முறையில் இந்தியா முழுவதும் வெளியானது. நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. படம் ரிலீஸான முதல் நாளிலிருந்தே இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. தமிழைப் போலவே வட இந்தியாவிலும் வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில், ’விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சக்சஸ் மீட் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி ஆகியோருக்கு கமல்ஹாசன் முத்தமழை பொழிந்தார். கமலின் இந்த திடீர் முத்தம் அவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in