`ஹி இஸ் பேக்’: இன்று முதல் `இந்தியன் 2’ ஷூட்டிங்

`ஹி இஸ் பேக்’: இன்று முதல்  `இந்தியன் 2’ ஷூட்டிங்

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்திலும் இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தினர். 'விக்ரம்' மெகா ஹிட்டுக்கு பிறகு, ’இந்தியன்-2’படத்தைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸும் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதை இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். முதலில் ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார். அவர் தெலுங்கு படத்தில் பிசியாகி விட்டதால் இப்போது ரவிவர்மன் இணைந்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை நடிகர் கமல்ஹாசனும் பகிர்ந்துள்ளார். ’ஹி இஸ் பேக்’என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் செப்டம்பர் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in