கமல்ஹாசனின் `ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்!

`ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசன்
`ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசன்கமல்ஹாசனின் `ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்!

நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியானத் திரைப்படம் ‘ஆளவந்தான்’. படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று இந்தப் படம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், இந்தப் படம் மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தது.

சமீபத்தில் நடிகர் ரஜினி நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த ‘பாபா’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தற்போது ‘ஆளவந்தான்’ திரைப்படமும் இப்போதுள்ள தலைமுறையிடம் வரவேற்பைப் பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளது படக்குழு. விரைவில், படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in