`இலக்கியத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறார்’: ஜெயமோகனுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து!

`இலக்கியத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறார்’: ஜெயமோகனுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து!

எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான ஜெயமோகனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமர், காடு, வெள்ளையானை உட்பட பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய அறம் சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளது.

இவர் திரைப்படங்களுக்கு வசனமும் எழுதிவருகிறார். நான் கடவுள், அங்காடித் தெரு, பாபநாசம், சர்கார், 2.0 உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர், இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாவலுக்கு வசனம் எழுதியுள்ளார்.

ஜெயமோகன்
ஜெயமோகன்

மலையாளப் படங்களுக்கும் வசனம் எழுதியுள்ள இவருக்கு இன்று 60-வது பிறந்த நாள். இதையடுத்து வாசகர்களும் எழுத்தாளர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில், ``மரபுத் தொடர்ச்சியை மறந்துவிடாமல், நவீனத்துவத்தை நோக்கிய நகர்வையும் விட்டுவிடாமல் இலக்கியத்தில் அயராது பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திவரும் எழுத்தாளர், என் ஆப்தர் எழுத்தாளர் ஜெயமோகன், 60 வயதைப் பூர்த்தி செய்கிறார். அவரது பிறந்த நாளில் ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.