`நடிப்பு ராட்சஸி...’ கோவை சரளாவை பாராட்டிய கமல்ஹாசன்

`நடிப்பு ராட்சஸி...’ கோவை சரளாவை பாராட்டிய கமல்ஹாசன்

பிரபு சாலமன் இயக்கியுள்ள ’செம்பி’ படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இயக்குநர் பிரபு சாலமன், செம்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஸ்வின் குமார் உட்பட பலர் நடித்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் பிரசன்னா இசை அமைத்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் ரியா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

கமல்ஹாசனுடன் இயக்குநர் பிரபு சாலமன்
கமல்ஹாசனுடன் இயக்குநர் பிரபு சாலமன்

இந்நிலையில் இந்தப் படக்குழு நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளது. ’விக்ரம்’ படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ’செம்பி’ குழுவினர் அவரை நேரில் சந்தித்தனர். அப்போது ‘செம்பி’ டிரெய்லரை கமல்ஹாசன் பார்த்து பாராட்டினார்.

கமல்ஹாசனுடன் செம்பி படக்குழு
கமல்ஹாசனுடன் செம்பி படக்குழு

சந்திப்பின்போது, தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன், ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் ரியா , இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை, ’நடிப்பு ராட்சசி’ என்று கமல்ஹாசன் பாராட்டினார்.

கமல்ஹாசனும் கோவை சரளாவும் கணவன் மனைவியாக சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in