மலையாள ஆன்தாலஜி படத்தில் கமல்ஹாசன்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மலையாளத்தில் உருவாக இருக்கும் ஆன்தாலஜி படத்தில் நடிக்க, கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆன்தாலஜி படங்கள் உருவாக்குவது இப்போது டிரெண்டாகி வருகிறது. ஓடிடி தளங்கள் இதுபோன்ற படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து, ஆந்தாலஜி தொடர் ஒன்றை முன்னணி ஓடிடி தளம் ஒன்று உருவாக்க இருக்கிறது.

மம்மூட்டி, மோகன்லால்
மம்மூட்டி, மோகன்லால்

இதற்காக, நடிகர் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில் ஆகிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் கதைகளை, பிரியதர்ஷன், லிஜோ ஜோச் பெலிசெர்ரி, ஜெயராஜ், ஷ்யாம் பிரசாத், சந்தோஷ் சிவன், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதில் கமல்ஹாசன் நடிக்கவோ, இயக்கவோ இல்லை என்றும் அவர் படம் தொடங்கும் முன் கதைகளை விவரித்துச் சொல்வார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in