'விக்ரம்’ படம் பிரச்சினை இல்லாமல் ரிலீஸாக இவர்கள் இருவர் தான் காரணம்: கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியவர்கள் யார்?

'விக்ரம்’ படம் பிரச்சினை இல்லாமல் ரிலீஸாக இவர்கள் இருவர் தான் காரணம்: கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியவர்கள் யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன், தயாரிப்பாளர் கேயார், செண்பகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: ஒரு படத்தின் வெற்றிக்கு ஒருத்தர் மட்டுமே காரணம் என்று யாரும் சொல்லவே முடியாது. நிஜமாக சினிமா தெரிந்தவர்களுக்கு அந்த மேஜிக் தெரியும். ஒரு இருநூறு பேர் வேலை செய்கிற இடத்தில் ஒருவர் தப்பு செய்தால் கூட படத்தில் தோல்விக்கு காரணமாக அமையக் கூடும். அனிருத் என்று சொன்னால், அவர் பின்னால் 12 பேர் இருக்கிறார்கள். ராஜ்கமல் என்றால் அதற்குப் பின்னால் 40 பேர் இருக்கிறார்கள். முக்கியமாக 3 பேர் தாங்கிப் பிடிச்சுட்டு இருக்கிறாங்க. அதுல இரண்டு பேரை இழந்துவிட்டேன்.

என் சினிமா வாழ்க்கையில் வேலை கிடைத்தால் போதும் என்று வந்தவன் நான். எனக்கு நடிப்பு ஆசை எல்லாம் இல்லை. அதைக் கிளப்பிவிட்டவர் கே.பாலசந்தர். அவர்தான் உனக்கு வீடு, கீடு கட்ட வேண்டாமா? நடி என்று சொல்லி நடிக்க வைத்தவர். எனக்கு வெற்றிகளை தமிழக மக்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தந்திருக்கிறார்கள்.

கடந்த 10 வருட காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் பண்ணி விட்ட படம் இதுதான். அதுக்கு முக்கிய காரணம், மகேந்திரனும், உதயநிதியும்தான். இவர்கள் கூட இருப்பது தைரியமாக இருக்கிறது. இல்லை என்றால் இடையில் இருப்பவர்கள் எங்கு காலை இடறி விட்டுவிடுவார்களோ என்று பயந்தே நடக்க வேண்டியிருக்கும். வீறு நடையெல்லாம் போட முடியாது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in