அந்த ஹீரோவுடன் இதுவரை ஏன் நடிக்கவில்லை?- கமல்ஹாசன் சொல்லும் ஒரே காரணம்தான்

அந்த ஹீரோவுடன் இதுவரை ஏன் நடிக்கவில்லை?- கமல்ஹாசன் சொல்லும் ஒரே காரணம்தான்

பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அந்த பிரபலமான ஹீரோவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் பஹத் பாசில், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கொச்சிக்கு சென்ற கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். மோகன்லால் உட்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:

மம்மூட்டி, கமல்ஹாசன்
மம்மூட்டி, கமல்ஹாசன்

நாங்கள் சேர்ந்து நடிப்பதற்கான சரியான ஸ்கிரிப்ட்டை தேடிக் கொண்டிருக்கிறோம். இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். நான் சில கதைகளைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருக்கச் சொன்னார். இதனால்தான் நாங்கள் சேர்ந்து நடிக்கும் படம் தாமதமாகி வருகிறது. அநேகமாக, ’விக்ரம்’ படத்தைப் பார்த்தபிறகு சரியான கதையை அவர் தேர்ந்தெடுப்பார், பிறகு நாங்கள் இணைந்து நடிப்போம்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in