கமல் குணமடைந்தார்; விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் திரும்புகிறார்

கமல் குணமடைந்தார்; விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் திரும்புகிறார்

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன், முழுமையாக குணமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சென்று திரும்பிய கமல்ஹாசன், இருமல் காரணமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு லேசான கரோனா இருப்பது உறுதியானது. நவ.22 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன், தொடர் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார்.

இதனால், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு, தற்காலிகமாக ரம்யா கிருஷ்ணன் பொறுப்பேற்றார். கமல்ஹாசன் குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியினரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இதனிடையே இன்று(டிச.1) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கமல்ஹாசன் குணமாகி விட்டதாகவும், 2 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் டிச.4 முதல் தனது பணிகளை அவர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வீடு திரும்பும் கமல்ஹாசன் போதிய தனிமைப்படுத்தல் மற்றும் ஓய்வுக்குப் பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளிலும் ஈடுபட உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in