கமல் படத்தை இயக்கும் மலையாள இயக்குநர்!

கமல் படத்தை இயக்கும் மலையாள இயக்குநர்!

கமல்ஹாசன் படத்தை அடுத்து இயக்கப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பிரபல மலையாளப் பட இயக்குநரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம், விஸ்வரூபம் படங்களின் எடிட்டருமான மகேஷ் நாராயணன் கமல் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இவர், மலையாளத்தில், ’சி யூ சூன்’, பகத் பாசில் நடித்து வரவேற்பைப் பெற்ற ’மாலிக்’, பார்வதி நடித்த ‘டேக் ஆஃப்’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

மகேஷ் நாராயணன்
மகேஷ் நாராயணன்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தனது அடுத்தப் படத்தை இயக்கப் போவது மகேஷ் நாராயணன் தான் என்றும் தனது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமே படத்தைத் தயாரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை இறுதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in