ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரன் உட்பட பலர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்த இந்தப் படம் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

ஜூன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.390 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமீரக அமைச்சர்  முபாரக் அல் நஹ்யானுடன் நடிகர் கமல்ஹாசன்
அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானுடன் நடிகர் கமல்ஹாசன்

இந்நிலையில், துபாய் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in