’புஷ்பா’ படக்குழுவைப் பாராட்டிய கமல்!

இசையமைப்பாளர் டிஎஸ்பி, நடிகர் அல்லு அர்ஜுன் மகிழ்ச்சி
’புஷ்பா’ படக்குழுவைப் பாராட்டிய கமல்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா’ படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்து வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மலையாள ஹீரோ பஹத் பாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பார்த்துள்ளார். பின்னர் படத்தில் பணியாற்றிய அல்லு அர்ஜுன் உட்பட அனைவரையும் பாராட்டியுள்ளார். இதை தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ படத்தைப் பார்த்ததற்கும் படத்தில் பணியாற்றிய அனைவரைப் பற்றியும் தாங்கள் குறிப்பிட்ட அழகான வார்த்தைகளுக்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in