‘உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி… மன்னிக்க, தம்பி சார்’: பிரபல நடிகருக்கு கமல்ஹாசனின் ட்விட்!

‘உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி… மன்னிக்க, தம்பி சார்’: பிரபல நடிகருக்கு கமல்ஹாசனின் ட்விட்!

தனக்கு நன்றி சொன்ன நடிகர் சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், நேற்று (ஜூன் 3) வெளியானது. நான்கு வருடத்துக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, கமலுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகி இருப்பதாக நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தெரிவித்தார். இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில், ’அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் நடிக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த லோகேஷ் கனகராஜுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், இது நீண்டநாட்களாக நடக்க இருந்த விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களின் அன்பு ஏற்கனவே இருக்கிறது. அது இன்னும் மக்களிடம் அதிகமாகிறது. உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி. மன்னிக்க, தம்பி சார்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in