’நீங்க செய்ய வேண்டிய ஒரே விஷயம்’ - லோகேஷ் கனகராஜுக்கு கமல் அட்வைஸ்

’நீங்க செய்ய வேண்டிய ஒரே விஷயம்’ - லோகேஷ் கனகராஜுக்கு கமல் அட்வைஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'விக்ரம்'. அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ’நான் இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டதில்லை. எனக்கும், ’விக்ரம்’ படத்திற்கும் நீங்கள் கொடுக்கும் வரவேற்பு வியப்பாக இருக்கிறது. இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல்ஹாசனுக்கும் அற்புதமான ரசிகர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். ‘ரசிகர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், எப்போதும் மனநிறைவின்றி இருப்பதுதான். நேர்மையாக, உண்மையாக உழைத்தால் அதை மக்கள் மதிப்பார்கள், விரும்புவார்கள். அவர்களின் அன்பில் இருந்துதான் எனக்கான ஆற்றல் கிடைத்தது. உங்கள் முயற்சிக்கு சக்தி அதிகம். இப்போது போல எதிர்காலத்திலும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பெருமையுடன் உங்களை ஆதரிக்கும்’ என்று ட்விட்டரில் கமல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in