`கே.ஜி.எஃப் 2’ படத்தை ஒன்றாகப் பார்த்த உலகநாயகனும், இசைஞானியும்!

`கே.ஜி.எஃப் 2’ படத்தை ஒன்றாகப் பார்த்த உலகநாயகனும், இசைஞானியும்!

கமல்ஹாசனும் இளையராஜாவும் ’கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தை ஒன்றாகப் பார்த்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’. யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனைப் படைத்து வரும் இந்தப் படம், ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனும் இசை அமைப்பாளர் இளையராஜாவும் இன்று திரையரங்கில் பார்த்துள்ளனர்.

சென்னை பிவிஆர் சினிமாஸில் இருவரும் சேர்ந்து படம் பார்த்தப் புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாக வருகிறது. படம் பற்றி அவர்கள் தெரிவித்த கருத்து ஏதும் வெளியிடப் படவில்லை. சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in