ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்: நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆடியோ வெளியீடு


ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்:  நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆடியோ வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளதையொட்டி நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' கடந்த ஜூன் மாதம் வெளியானது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா ஹெஸ்ட ரோலில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலையும் அள்ளிக் குவித்தது. இந்த நிலையில் இப்படம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு நூறு நாட்களை கடந்த படமாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நூறாவது நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில், "ரசிகர்களின் ஆதரவோடு 'விக்ரம்' திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். 'விக்ரம்' வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும் ” என்று ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in