35 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி: வெளியானது அறிவிப்பு!

35 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி: வெளியானது அறிவிப்பு!

கமல்ஹாசனின் அடுத்தப் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு ‘நாயகன்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில் இருவரும் இணைவதாக சொல்லப்பட்டாலும் அது நடக்கவில்லை. இந்த சூழலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், இப்படத்தை மணிரத்னம் இயக்குவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலகநாயகன் கேஹெச் 234’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் மணிரத்னம், ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோரும் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மெகா ஹிட்டான நிலையில், அவர் அடுத்ததாக ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். அதுபோல மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாம் பாகமும் வேகமாக தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு கமல் - மணிரத்னம் கூட்டணியில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in