நடிகை பாலியல் புகார்: பிரபல நடிகர் மீண்டும் கைது

நடிகை பாலியல் புகார்: பிரபல நடிகர் மீண்டும் கைது

நடிகை கொடுத்த பாலியல் புகாரில், பிரபல நடிகர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தி நடிகர் கமால் ஆர் கான் என்ற கமால் ரஷித் கான். இவர், தேஷ் துரோகி, ஏக் வில்லன் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சிதம் என்ற இந்திப் படத்தையும் ’முன்னா பாண்டே பெரோஸ்கார்’ என்ற போஜ்புரி படத்தையும் தயாரித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் பரபரப்பு கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் குறித்து வெறுக்கத்தக்கக் கருத்துக்களைத் தெரிவித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகையும் பாடகியுமான ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு பார்ட்டி ஒன்றில் கமால் ஆர் கானை சந்தித்துள்ளார். அவரிடம் தன்னை தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கமால் கான், அடுத்து தயாரிக்கும் படத்தில் இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக உங்களை நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2019-ம் ஆண்டு வெர்சாவோ போலீஸில் அந்த நடிகை புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் போலீஸார், கமால் ஆர் கானை மீண்டும் கைது செய்தனர். பின்னர் போர்விலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in