'கல்கி 2898 ஏடி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

'கல்கி 2898 ஏடி'
'கல்கி 2898 ஏடி'

பான் வேர்ல்டு படமாக பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கல்கி 2898ஏடி’
‘கல்கி 2898ஏடி’

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் என இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் படமாக உருவாகி வருகிறது 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் 'கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வருடம் மே மாதம் ஒன்பதாம் தேதி படம் வெளியாகிறது.

'கல்கி 2898 ஏடி'
'கல்கி 2898 ஏடி'

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையான 'கல்கி 2898 ஏடி' கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்தியா மட்டுமல்லாது ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல மொழிகளிலும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொங்கல் கொண்டாட எல்.முருகன் வீட்டுக்கு வருகிறார் பிரதமர்!

'எனக்கு உடல்நிலை சரியில்லையா?': முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்:எது எது தெரியுமா?

திருமங்கலத்தில் களைகட்டிய சந்தை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அயலானுக்குப் பின்னால் இருக்கும் வலி மிகுந்த கதை... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in