'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆனந்தி, கலையரசன்
ஆனந்தி, கலையரசன்

டைட்டானிக்: காதலும் கவுந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர்கள் பாலா, சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.ஜானகிராமன் இயக்கியுள்ள படம், ’டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. இதில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி, மதுமிதா, ராகவ் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமான இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ஆனந்தி
ஆனந்தி

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டே முடிந்துவிட்டாலும் சில பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இப்போது தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார். அதன்படி, மே மாதம் 6 ஆம் தேதி இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in