தமிழ் திரையுலகம் சார்பில் 'கலைஞர் 100' கொண்டாட்டம்: நடிகர் ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
Updated on
1 min read

தமிழ் திரையுலகம் சார்பில் அடுத்த மாதம் 24-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி விழாக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு இன்று நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

 நடிகர் கமல்ஹாசனுடன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசனுடன் சந்திப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடந்த அதன் கூட்டத்தில் சங்கத்தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், ‘’தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி இல்லத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழாக்குழு சார்பில் இன்று நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். நிகழ்வில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

இதேபோல, நடிகர் கமல்ஹாசனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழாக்குழு சார்பில் நேரில் அழைப்பு விடுத்தனர். அவ்விழாவில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக கமலஹாசன் உறுதி அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in