அதிரப் போகுது சென்னை... ’கலைஞர் 100’ விழாவிற்கு இந்திய திரையுலகமே தயாராகுது! அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பு!

’கலைஞர் 100’
’கலைஞர் 100’

டிசம்பர் 24ம் தேதி, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாடப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்தியத் திரையுலகின் முன்னணி கலைஞர்களுக்கு, விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடந்த அதன் கூட்டத்தில் சங்கத்தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்துடன் நிர்வாகிகள் சந்திப்பு

சமீபத்தில் நடிகர்கள் ரஜினி, கமலுக்கு விழாவில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட் பாட்ஷா அமிதாப்பச்சன், மோகன்லால், சிவராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய திரையுலக ஜாம்பவான்களும் விழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ள நிலையில், அடுத்த மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ள ’கலைஞர் 100’ விழாவினை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in