ரேவதி இயக்கத்தில் கஜோல்: ’சலாம் வெங்கி’ படப்பிடிப்பு தொடங்கியது

ரேவதி இயக்கத்தில் கஜோல்: ’சலாம் வெங்கி’ படப்பிடிப்பு தொடங்கியது

கஜோல் நடிப்பில், நடிகை ரேவதி இயக்கும் ’சலாம் வெங்கி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

பிரபல நடிகை ரேவதி, ’மித்ரு மை ஃபிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது கஜோல் நடிக்கும் ’சலாம் வெங்கி’ என்ற இந்திப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு முதலில் வேறு தலைப்பு வைத்திருந்தனர். இந்தப் படத்தை பிளிவ் புரொடக்‌ஷன்ஸ் (Blive Productions) டேக் 23 ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

தயாரிப்பாளர்களுடன் ரேவதி, கஜோல்
தயாரிப்பாளர்களுடன் ரேவதி, கஜோல்

சுராஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரேஜா ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படம், நம்ப முடியாத உண்மைக் கதையை கொண்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று (பிப். 11) தொடங்கி இருக்கிறது. இதை நடிகை கஜோல் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், "நாங்கள் இன்று சொல்லப்பட வேண்டிய கதை, தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, கொண்டாட வேண்டிய வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட பயணத்தை தொடங்கி இருக்கிறோம். ’சலாம் வெங்கி’யின் நம்ப முடியாத உண்மைக் கதையை உங்களிடம் பகிரக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ரேவதி கூறும்போது, "இதில் சுஜாதா என்ற தாயின் பயணம் இருக்கிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பயணம் அது. இந்த கேரக்டருக்கு கஜோல்தான் என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டோம். அவர் கண்களும் அழகானப் புன்னகையும் எதையும் சாத்தியம் என நம்ப வைக்கும் ஆற்றல் கொண்டவை. அவருடன் இணைந்து பணிபுரிவதில் ஆவலாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.