நடிகை கஜோலுக்கு கரோனா உறுதி

நடிகை கஜோலுக்கு கரோனா உறுதி

பிரபல நடிகை கஜோல், தனக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 281- ஆக உள்ளது. இந்த தொற்று காரணமாக, சமீபகாலமாக பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நைசா, கஜோல்
நைசா, கஜோல்

இந்நிலையில், பிரபல இந்தி நடிகை கஜோலுக்கும் கரோனா தொற்று பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக சளி மற்றும் தொண்டை வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அவர், கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகள் நைசா தேவ்கனின் புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ள கஜோல், ’எனது சிவந்த மூக்கை யாரும் பார்க்க நான் விரும்பவில்லை. அதனால் உலகின் இனிமையான புன்னகையுடன் சேர்ந்திருப்போம். மிஸ் யூ நைசா’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் விரைவில் குணமடைய, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். கூடவே, ’நைசா உங்களைப் போலவே அழகாக இருக்கிறார்’என்றும் கூறி வருகின்றனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in