`கட்டப்பா' ஸ்டைலில் ராஜமவுலிக்கு நன்றி சொன்ன காஜல் அகர்வால்!

`கட்டப்பா' ஸ்டைலில் ராஜமவுலிக்கு நன்றி சொன்ன காஜல் அகர்வால்!

`கட்டப்பா' ஸ்டைலில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்து தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழில் பேரரசு இயக்கத்தில் 'பழனி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020-ல் இவருக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே காஜல் கர்ப்பமானார். இதனால், 'இந்தியன்2' உள்ளிட்ட முக்கிய படங்களில் இருந்தும் அவர் விலக நேரிட்டது. தமிழில் கடைசியாக காஜல் நடிப்பில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. இந்நிலையில் காஜர் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே, இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாகுபலி கட்டப்பா ஸ்டைலில் இயக்குநர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜர் அகர்வால். பாகுபலிக்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது கட்டப்பா வைப்பார். அதுபோலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள காஜல், "ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி தெலுங்கில் அதிக வசூலை பெற்ற `மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in