கர்ப்பத்துடன் காஜல் அகர்வால் உடற்பயிற்சி!

கர்ப்பத்துடன் காஜல் அகர்வால் உடற்பயிற்சி!

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை கடந்த 2020 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அரது கணவர் கௌதம் கிட்ச்லு அறிவித்தார். பின்னர் காஜல் அகர்வால் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில், கர்ப்பத்துடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை காஜல் வெளியிட்டுள்ளார். அதில், பெண் பயிற்சியாளரின் வழிகாட்டலுடன் அவர் உடற்பயிற்சி செய்கிறார். அதில் அவர், “நான் எப்போதுமே சுறுசுறுப்பான நபராகவே இருக்கிறேன். கர்ப்பம் என்பது வித்தியாசமான விளையாட்டு. கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஆரோக்கியத்துக்காக ஏரோஃபிக் மற்றும் ஏரோஃபிக்ஸில் உடற்பயிற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நல்ல உடற்தகுதியை பராமரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in