'இந்தியன் 2’ படப்பிடிப்புக்குத் திரும்பிய காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்'இந்தியன் 2’ படப்பிடிப்புக்குத் திரும்பிய காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன்2’ படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய சூழலில் அதன் படப்பிடிப்புக்குத் திரும்பி இருப்பதை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர், ‘’ 'இந்தியன்2’ படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பியுள்ளேன். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது" எனக்கூறியுள்ளார். ஒப்பனை அறையில் இருந்து புகைப்படம் எடுத்தும் இதைப் பகிர்ந்துள்ளார். இதில் தனது முகத்தைக் காட்டாமல் ஹார்ட் எமோஜியால் மறைத்துள்ளார். காஜலும் ‘இந்தியன்2’ படத்தில் புரொஸ்தடிக் ஒப்பனை செய்திருக்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். ஏனெனில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் 90 வயது சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் சுகன்யா கதாபாத்திரத்தில்தான் இப்போது காஜல் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த 2017-ல் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு இடையில் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் நின்றது. காஜல் அகர்வாலும் திருமணம், குழந்தை ஆகிய காரணங்களால் பிரேக் எடுத்தார். இதற்கடுத்து, குதிரையேற்றம், சண்டைப் பயிற்சி போன்றவற்றையும் ‘இந்தியன் 2’ படத்திற்காக கற்றுக் கொண்டார் காஜல். அந்த வீடியோக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in