ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா: காஜல் அகர்வால் மகிழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா: காஜல் அகர்வால் மகிழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றதில் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக, நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்து வருகிறது. இந்த விசாவை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இந்திய திரைத் துறை பிரபலங்கள் பலருக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன், தமிழ் திரைத் துறையில் முதல் நடிகராக கோல்டன் விசா பெற்றார். கடந்த வருடம், பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகைகள் த்ரிஷா, அமலா பால் உட்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இதற்கிடையே நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கப் பட்டுள்ளதாக அவர் நண்பர் மகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“கோல்டன் விசா பெற்றதில் மகிழ்ச்சி. எங்களைப் போன்ற திரைக் கலைஞர்களுக்கு இந்த நாடு எப்போதும் ஊக்கமளித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால ஒத்துழைப்புக்கு நன்றியுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in