பாலிவுட்டிற்குப் போன 'கைதி': அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள்

பாலிவுட்டிற்குப் போன 'கைதி': அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள்

இந்தியில் உருவாகும் ‘கைதி’ படத்தில் நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ல் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘கைதி’. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். அவரே இயக்கி நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘போலா’ என இந்தப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் தொடங்கும் இதன் அடுத்த ஷெட்யூலில் நடிகை அமலாபால் இணைகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் மற்றும் தபு என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

அமலா பால்
அமலா பால்

தமிழில் ‘கைதி’ படத்தில் கதாநாயகனுக்கு என தனிப்பாடலோ அல்லது கதாநாயகிகளோ என எதுவும் இருக்காது. ஆனால், பாலிவுட்டில் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கதாநாயகிகளை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். அமலாபால் மற்றும் தபுவிற்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும். தமிழில் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in