`கைதி’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு!

`கைதி’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு!

‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, நரேன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியானத் திரைப்படம் ‘கைதி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இந்த வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்பதை நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதை அறிவித்தார்கள். கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘போலா’ எனப் பெயரிட்டுள்ளனர். தமிழில் நரேன் கதாபாத்திரத்தில் தபு நடித்திருக்கிறார்.

இந்தியில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ‘படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் 30-ம் தேதி படத்தை வெளியிட இருக்கிறோம்’ எனப் புகைப்படத்துடன் இதனை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in