வைரலாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட டீசர் !

வைரலாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட டீசர் !
போஸ்டர்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. ‘நானும் ரௌடி தான்’படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமான்டிக் காமெடி ஜானரில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார்.

அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ’முதன்முதலா என்னைக்கு லவ்வை சொன்னியோ, அன்னைக்குதான் என் வாழ்க்கை அழகா மாறுச்சு’ என்று விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இருவர் நோக்கியும் கை நீட்ட, ஜாலி கேலியாகத் தொடர்கிறது டீசர். இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் சினிமாவில், காதல், காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தைப் போக்கும்படி, அழகான காதல் கவிதையாகவும் சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாகவும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இருக்கும்” என்கிறது படக்குழு.

படப்பிடிப்புப் பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. படம் ஏப்ரல் 28-ம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.