
நாளை வெளியாக உள்ள `காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட் அடித்தது.
இந்நிலையில், இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நாளைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் உங்களது பணத்தை நாங்கள் கொடுத்திடுவோம் எனவும் திரையரங்கு சார்பில் கூறப்பட்டுள்ளது. எதற்காக இந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.