‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம், 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். நயன்தாரா, சமந்தா உட்பட பலர் நடித்துள்ளனர். கண்மணியாக வரும் நயன்தாரா, கதிஜாவாக வரும் சமந்தா இருவரையும் காதலிக்கும் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அதிரப்பள்ளியில் நடந்தது. இந்தப் படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியான டீசரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர விக்னேஷ் சிவன் இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in