‘என்னால் புன்னகைக்க முடியவில்லை’: பிரபல பாடகருக்கு ஏற்பட்ட திடீர் நோய்!

‘என்னால் புன்னகைக்க முடியவில்லை’: பிரபல பாடகருக்கு ஏற்பட்ட திடீர் நோய்!

தனது முகத்தின் ஒரு பகுதி முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (28). உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.இந்தியாவிலும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இப்போது அவர் கனடா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கனடாவின் டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் (Ramsay Hunt syndrome) பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதாவது, முகத் தசையின் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் காதின் அருகில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும். முக முடக்குவாதம் ( facial paralysis) ஏற்படும். கேட்கும் திறனையும் இழக்கும் ஆபத்து உள்ளது.

அந்த வீடியோவில், மிக முக்கியமானது. இந்த வீடியோவை பாருங்கள் என தலைப்பிட்டுள்ள அவர், கண் இமைக்காமல் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். "என்னால் ஒரு பக்கத்தில் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரத்தை ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை.

என் முகத்தில் ஒரு பக்கத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை. இது தீவிரம் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முகத்திற்கான பயிற்சிகள் அளித்து வருகிறேன். குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. 100 சதவீதம் முழுமையாகத் திரும்பி வருவேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக 2 முறை அவரது உலகச் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜஸ்டினினின் இந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே 14 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in