சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகும் #JusticeforVigneshShivan – என்ன காரணம்?

அஜித்துடன் விக்னேஷ்சிவன்
அஜித்துடன் விக்னேஷ்சிவன்

இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு ஆதரவு தெரிவித்து #JusticeforVigneshShivan என்ற டேக் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் இந்த பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் வெற்றியடைந்தது. இதனை அடுத்து, நடிகர் அஜித் தனது 62-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் இணைய இருக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘துணிவு’ படத்தைப் போலவே ஆக்‌ஷன் படமாக அஜித் எதிர்பார்ப்பதால், தற்போது அந்தப் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ்சிவன் விலக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. விக்னேஷ்சிவனுக்கு பதிலாக அட்லி அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 62-வது படத்தில் இருந்துதான் விக்னேஷ்சிவன் விலகி இருக்கிறார் எனவும் அஜித்தின் 63-வது படத்தை அவர் இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விக்னேஷ்சிவனை அஜித் படத்தில் இருந்து நீக்கக்கூடாது எனவும், அவரே இந்தப் படத்தின் இயக்குநராக தொடர வேண்டும் எனவும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ்சிவனை ஏமாற்றி விட்டார் என்ற ரீதியிலும் அவருக்கு எதிராகவும் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர். படம் குறித்தான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஏகே 62’ திரைப்படம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in