
பிரபல ஹாலிவுட் இணையதளமான வெரைட்டி வெளியிட்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னனி ஹீரோவாக திகழ்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் அவர் ஏற்றிருந்த பீமா கதாபாத்திரம் படத்தின் கதையோட்டத்திற்கு பெரும் துணை புரிந்தது.
இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட்டாகியுள்ளது. அதன் பிறகு ஆஸ்கர் விருதுக்கு 'நாட்டுக்குத்து' பாடல் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இணையதளமான வெரைட்டி வெளியிட்டுள்ள சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் பெற்றுள்ளார்.
இந்த ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்திய நடிகர் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும். மேலும் நடிகர் ஜூனியர் என்டிஆர் முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கான கணிப்பு பட்டியலில் இடம் பெற்றதற்கு அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலி பெயர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.