ஷாருக் கான் - ஜூஹி சாவ்லா: தலைமுறை தாண்டி தழைக்கும் தோழமை!

ஷாருக்  கான் - ஜூஹி சாவ்லா: தலைமுறை தாண்டி தழைக்கும் தோழமை!
ஜூஹி, ஆர்யன்

ஷாருக்கானின் தொடக்ககால திரைப்படங்களின் நாயகியும் குடும்ப நண்பருமான ஜூஹி சாவ்லா, தனது தோழமையை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி உள்ளார்.

ஷாருக் மகன் ஆர்யன் கான் கைதாகி சிறையிலிருந்தபோது, ஆர்யனுக்கான ஜாமீன் பத்திரத்தில் யார் கையெழுத்திடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஷாருக் கானுக்கு உறவுகளும், நட்புகளும் ஏராளம் என்பதால் அவர்களில் மிகவும் நெருக்கமானவரை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அந்த வகையில் ஆர்யனுக்காக ஜூஹி சாவ்லா கையெழுத்திட வந்தபோது, இரு குடும்பத்தினருக்கும் இடையிலான பந்தம் வெளியுலகுக்கு தெரியவந்தது.

திரைக்கு அப்பாலும் தோழமை பாராட்டிய ஷாருக்-ஜூஹி, தத்தம் திருமண வாழ்க்கையிலும் இந்த நட்பை தொடர்ந்தனர். அதன் நீட்சியாக ஷாருக் மற்றும் ஜூஹியின் குழந்தைகள் ஒன்றாக வெளியிடங்களுக்குச் செல்வதும், விருந்துகளில் பங்கேற்பதும் நடந்தது.

ஆர்யன் கானுக்கு தனிப்பட்ட வகையில் ஜூஹி சாவ்லா மீது மரியாதை அதிகம் என்பதாலும், மகன் சார்ந்த விஷயங்களில் ஜூஹியை, ஷாருக் அதிகம் கலப்பதுண்டு. ஜூஹி, ஆர்யன் இருவரின் பிறந்தநாளும் ஒரேநாளில்(நவ.13) வருவதாலும், ஜூஹி சாவ்லாவிடம் சிறுவயதிலிருந்தே ஆர்யன் கானுக்கு ஒட்டுதல் அதிகம்.

தற்போது, ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கும் ஜூஹி சாவ்லா, பிறந்தநாள் பரிசாக 500 மரங்களை நடப்போவதாக அறிவித்திருக்கிறார். கூடவே ஷாருக்கின் வாரிசுகளுடன், தனது வாரிசுகளும் இடம்பெற்றிருக்கும் குழந்தைப் பருவ புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.