பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படத்தை இயக்கி வருகிறார், கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. NTR31 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

பிரசாந்த் நீலுடன், ஜூனியர் என்.டி.ஆர்
பிரசாந்த் நீலுடன், ஜூனியர் என்.டி.ஆர்

படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், "இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய யோசனை. ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரம்மாண்டம் என்னைத் தடுத்தது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் அமைந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோ, வில்லன் என்பதைத் தாண்டி படத்தில் கமலுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் கதையைக் கேட்ட கமல்ஹாசன் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. இது வதந்தியாக இருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in