ஹிரித்திக் ரோஷன் வில்லனாக ஜூனியர் என்டிஆர்!

ஹிரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர்
ஹிரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர்

பாலிவுட்டில் தடம் பதிக்கும் ஜூனியர் என்டிஆர், ஹிர்த்திக் ரோஷனின் வார் 2 திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

புஷ்பா, ஆர்ஆர்ஆர் என தெலுங்கு சினிமாவின் பான் இந்தியா வெற்றிப் படங்களால், டோலிவுட் நடிகர்களுக்கு பாலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்து வருகிறது. அதிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் மேடையில் அங்கீகாரம் பெற்றதும், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு பாலிவுட்டில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த வகையில், கொரட்டெல்ல சிவா இயக்கத்தில் புதிய தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் ஜூனியர் என்டிஆர், பாலிவுட் ஆக்‌ஷன் அதிரடியான ’வார் -2’ திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தென்னக சினிமாக்கள் பான் இந்தியா வெற்றியுடன் பாலிவுட்டை மிரட்ட ஆரம்பித்திருக்கும் வரிசையில், பாலிவுட் படங்களில் தென்னக நட்சத்திரங்களை இடம்பெறச் செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அந்த திரைப்படங்களுக்கான சந்தையை, தென்னிந்தியாவுக்கும் விரிக்கும் வித்தையை இந்தி சினிமா உலகம் கையிலெடுத்திருக்கிறது. இந்த வகையில் பாலிவுட் திரைப்படங்களில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நேரடியாக நடிக்கத் தொடங்கி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in