500 தியேட்டர்களில் 50-வது நாள்: ஆர்ஆர்ஆர் `ஆஹா' சாதனை!

500 தியேட்டர்களில் 50-வது நாள்: ஆர்ஆர்ஆர் `ஆஹா' சாதனை!

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் 500 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உள்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘ ஆர்ஆர்ஆர்’. மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியானது. கரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் இது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலைக் குவித்து வந்தது. உலகம் முழுவது ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து புதிய சாதனைப் படைத்தது.

தற்போது இந்தப் படம் 50 நாட்களை கடந்துள்ளது. 500 திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் #50DaysForRRR என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

இந்தப் படம், வரும் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in