பிக் பாஸ்7: அழுதுகொண்டே ஜோவிகா சொன்ன விஷயம்; நெகிழ்ந்த ரசிகர்கள்!

ஜோவிகா
ஜோவிகா

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் ஜோவிகா சொன்ன விஷயம் சக போட்டியாளர்களை மட்டுமல்லாது, பார்வையாளர்களையும் நெகிழ வைத்துள்ளது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் விதமாக ‘Know Your Housemates' என்ற டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில் இரண்டு போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதையும் இதில் விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது.

ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும்போதே மேடையில் படிப்பில் தனக்கு நாட்டமில்லை எனவும் நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பதால் தன் அம்மா அதற்கு ஊக்குவித்து வருகிறார் எனவும் சொல்லி இருந்தார். மேலும், தான் படித்த பள்ளியில் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களுக்கு பெரிதாக ஊக்கம் தரவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது நடக்கும் இந்த டிபேட்டில் ஜோவிகா பேசியபோது, ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே என் பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் என்னை யாரும் கலந்துகொள்ள விடவில்லை. இப்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையே எனக்கு இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கே தெரிகிறது” என்று அழுது கொண்டே கூறினார். ஜோவிகாவின் இந்தப் பேச்சு அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்த அவரை கைத்தட்டி உச்சாகப்படுத்தி தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஜோவிகா அவர் அம்மாவை போல சண்டை போடாமல் இயல்பாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in