கமலின் ‘ஆளவந்தான்’ படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு என்ன வேலை?

கமலின் ‘ஆளவந்தான்’ படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு என்ன வேலை?

நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் நடிகர் ‘ஜெயம்’ ரவி பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தில் நடிகர் ‘ஜெயம்’ ரவி உதவி இயக்குநராக வேலை பார்த்து இருக்கிறார்.

ஆளவந்தானில், ஜெயம் ரவி உதவி இயக்குநராக பணியாற்றியது குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ‘ஜெயம்’ ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான மோகன், சுரேஷ் கிருஷ்ணாவின் நெருங்கிய நண்பர். இதனால், தனது மகன் ‘ஜெயம்’ ரவியை சேர்த்துக்கொள்ளும்படி அவர் கேட்க, அதன்படி ‘ஆளவந்தான்’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த தகவலை வேறொரு பேட்டியில் ஆமோதித்துள்ள ‘ஜெயம்’ ரவி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கமல்ஹாசன் என்ற இரண்டு ஜாம்பவான்களிடம் இருந்தும் வேலை கற்றுக் கொண்டேன் என மகிழ்ச்சி பகிர்ந்திருக்கிறார்.

சமீபத்தில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மீண்டும் திரையிடப்பட்ட ‘பாபா’ திரைப்படம் உலக அளவில் நான்கு கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in