
‘தனி ஒருவன்2’ திரைப்படம் விரைவில் தொடங்க இருப்பதாக நடிகர் ‘ஜெயம்’ ரவி தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரவி, நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து, ரவி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘தனி ஒருவன்’ படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே இந்தப் படம் தொடங்க இருந்ததாகவும் ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிஸியாக இருந்ததால் அது தாமதமாகி இருக்கிறது என்பதையும் கூறியுள்ளார். மோகன்ராஜா இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். படம் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு இது தெலுங்கிலும் ரீமேக் ஆனது.
’இறைவன்’ படத்தை அடுத்து ‘அகிலன்’, ‘பொன்னியின் செல்வன்2’ ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.